இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் வாரிசு திரைப்படத்தின் அப்டேட் நாளுக்கு நாள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் வாரிசு திரைப்படத்தில் நடிகர் சிம்பு பணியாற்றி இருப்பதாக, தகவல் வெளியாகி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
விஜய்யின் 66 வது படமாக உருவாகி இருக்கும் வாரிசு திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். முழுக்க முழுக்க குடும்ப கதையம்சம் கொண்ட படமா உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் குஷ்பு, பிரகாஷ்ராஜ், ஷ்யாம் போன்ற முக்கிய நட்சத்திரங்கள் பலரும் நடித்துள்ளனர்.
மேலும் வாரிசு திரைப்படத்தை , டோலிவுட்டின் பிரபல தயாரிப்பாளராக விளங்கும் தில் ராஜு , பிரம்மாண்ட முறையில் தயாரித்து வருகிறார். பொங்கலுக்கு வெளியாக இருக்கும் இத்திரைப்படம் , நடிகர் அஜித்தின் துணிவு படத்துக்கு போட்டியாக வெளிவரவுள்ளது. நீண்ட வருடங்களுக்கு பிறகு விஜய் மற்றும் அஜித் திரைப்படங்கள் நேருக்கு நேர் மோத இருப்பதால், இருவரின் ரசிகர்களும் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர்.
இத்திரைபடத்திற்கு இசையமைப்பாளர் தமர் இசையமைத்துள்ளார். மேலும் இவரது இசைக்கு அழகு சேர்க்கும் வகையில் நடிகர் விஜய் ரஞ்சிதமே பாடலை பாடியிருந்தார். இப்பாடல் வெளிவந்தது முதல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று 65 மில்லியன் பார்வையாளர்களை கடந்து யூடுயூப் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. இதையடுத்து இப்படத்தின் மற்றுமொரு பாடல் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தில் நடிகர் சிம்பு ஒரு பாடலை பாடியுள்ளதாக சொல்லப்படுகிறது. இரு தினங்களுக்கு முன்னதாக இப்பாடலின் பதிவு வேலைகள் முடிந்துள்ளதாகவும், அடுத்த மாதம் இப்படாலை படக்குழு வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இத்தகவல் வெளியானது முதல் விஜய் மற்றும் சிம்பு ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்து வருகின்றனர். மேலும் வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா அடுத்தமாதம் 23 ஆம் தேதியன்று, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் , நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.