விஜய் டிவி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்து வெள்ளித்திரைக்கு சென்று ரசிகர்களை கவர்ந்து வருபவர் தான் நடிகர் ரோபோ ஷங்கர்.
அதுமட்டுமன்றி ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் பங்குபெற்று வருகிறார், அதுமட்டுமல்லாது ரோபோ ஷங்கர் சோஷியல் மீடியாக்களிலும் ஆக்டிவாக இருக்கும் ஒரு நபர்.மேலும் தனது மகள் மற்றும் மனைவியோடும் ஷோஷியல் மீடியா பக்கங்களில் வீடியோக்களை பதிவிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருவார்.
தற்போது திரைப்படங்களில் ஒப்பந்தமாகி பிஸியாக நடித்து வரும் நிலையில், சமீபத்தில் சர்ச்சை ஒன்றில் சிக்கி வருகிறார். சென்னை வளசரவாக்கம் பகுதியில் வசித்து வரும் ரோபோ சங்கர் , தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் வீட்டில் கிளி வளர்த்து வருவதாக வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தார்.
அவ்வீடியோவை தொடர்ந்து நடிகர் ரோபோ ஷங்கர் வீட்டில் கிளி வளர்த்து வருவதாக வனத்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர், இதன் அடிப்படையில் வனத்துறை அதிகாரிகள் ரோபோ ஷங்கரின் வீட்டில் சோதனை நடத்தினர். இதில் அவர் வீட்டில் வளர்த்து வந்த அலேக்சாண்டரியன் பச்சை கிளிகளை கூண்டோடு வனத்துறையினர் பறிமுதல் செய்து வந்தனர்.
இது குறித்த விசாரணையில் முறையான அனுமதி பெறாமல் ரோபோ ஷங்கர் கிளிகளை வளர்த்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து ரோபோ ஷங்கரின் வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட கிளிகளை கிண்டி சிறுவர் பூங்காவில் வனத்துறையினர் ஒப்படைத்தனர். இதனை தொடர்ந்து வழக்கு தொடரப்பட்ட நிலையில் உரிய அனுமதியின்றி வீட்டில் வெளிநாட்டு வகையான கிளிகளை வளர்த்து வந்ததன் அடிப்படையில் நடிகர் ரோபோ ஷங்கருக்கு வனத்துறையினர் 2.5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். தற்போது ரோபோ ஷங்கர் உரிய அனுமதியின்றி வளர்த்து வந்த கிளிகளுக்காகக், அபராதம் வரை சென்றுள்ளார் என சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.