தமிழ் சினிமாவின் பழம்பெரும் ஸ்டன்ட் மாஸ்டர்களில் மிகவும் முக்கியமானவர் ஜூடோ ரத்தினம், இவருக்கு வயது 92 சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்த இவர் தீவிர சிகிச்சையில் இருந்து வந்துள்ளார்.
அக்காலத்தில் இவர் ஸ்டன்ட் மாஸ்டராக பணியாற்றிய திரைப்படங்கள் , இரு வல்லவர்கள், முத்து சிப்பி, காசேதான் கடவுளடா, முரட்டுக்காளை , நெற்றிக்கண் , போக்கிராஜா , பாயும்புலி , நான் மகான் அல்ல போன்ற திரைப்படங்களில் ஸ்டன்ட் மாஸ்டராக பணியாற்றி இருக்கிறார். இதில் மிகவும் சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால் பெரும்பாலான ரஜினியின் திரைப்படங்களுக்கு இவர் தான் ஸ்டன்ட் மாஸ்டராக இருந்துள்ளார்.
இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி , ஆங்கிலம், போன்ற மொழிகளிலும் ஜூடோ ரத்தினம் ஸ்டன்ட் மாஸ்டராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் ஸ்டன்ட் கலைஞராகவும், இயக்குநராகவும் இதுவரை 9 மொழிகளில் பணியாற்றி 1200 க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியுள்ளார் என்ற பெருமையின் சொந்தக்காரராகவும் திகழ்ந்து வருகிறார். இதையடுத்து தமிழில் 63 ஹீரோக்களுக்கு ஸ்டன்ட் காட்சிகள் அமைத்தவர் என்ற கின்னஸ் சாதனையையும் படைத்து இருக்கிறார்.
இவர் பெரும்பாலும் நடிகர் ரஜினிக்கு தான் அதிக ஸ்டன்ட் மாஸ்டராக இருந்த நிலையில் முரட்டுக்காளை , மிஸ்டர் பாரத் , பாயும் புலி , பாண்டியன் என ரஜினியின் நடிப்பில் வெளிவந்த திரைப்படங்கள் அனைத்திலும் இவரது ஸ்டன்ட் காட்சிகள் தான் இடம்பெற்றிருக்கும். இவர் ரஜினிக்கு மட்டுமே 46 படங்களில் ஸ்டன்ட் மாஸ்டராக பணியாற்றி இருக்கிறார்.
சமீப நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்த ஜூடோ ரத்தினம் வயது மூப்பு காரணமாக உயிரிழந்து இருக்கிறார். இவரிடம் ஸ்டன்ட் பயிற்சி எடுத்து திரையுலகில் 20 சண்டை பயிற்சி இயக்குனர்கள் அறிமுகமாகியுள்ளனர், இவரின் இறப்பு செய்தியை அறிந்து அதிர்ச்சியடைந்த சினிமா வட்டாரங்கள் , ரசிகர்கள் என அனைவரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.