தமிழ் சினிமாவின் ஜாம்பவானான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இத்திரைப்படத்தை லைகா நிறுவனம் பிரம்மாண்டமான முறையில் தயாரித்து வருகிறது. அதுமட்டுமல்லாது ஜெயிலர் திரைப்பட படப்பிடிப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்து வருகிறது படக்குழு. ஜெயிலர் திரைப்படத்துக்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். மேலும் இதில் முக்கிய நடிகர்கள் பலரும் நடித்து வருகின்றனர்.
இதனை தொடர்ந்து சமீபத்தில் லைகா நிறுவனத்தின் நிறுவனர் சுபாஷ்கரனின் பிறந்தநாளையொட்டி, லைகா நிறுவனம் பெரிய அறிவிப்பை வெளியிட்டது, அதாவது ஜெயிலர் திரைப்படத்தின் பட்பிடிப்புகள் நிகழ்ந்து கொண்டிருக்கும் நிலையிலேயே ரஜினியின் அடுத்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டது, அதாவது தலைவர் 170 படத்துக்கான அப்டேட்டை வெளியிட்டிருந்தது, அதனுடன் தலைவர் 170 திரைப்படத்தை ஜெய்பீம் திரைப்படத்தை இயக்கிய ஞானவேல் இயக்க இருப்பதாகவும் , அடுத்த ஆண்டின் இறுதிக்குள் இத்திரைப்படத்தை வெளியிடுவதாகவும் அறிவித்திருந்தது.
சமீப நாட்களாக சூப்பர்ஸ்டார் குறித்த தகவல்களாகவே வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது மற்றுமொரு தகவல் வெளியாகியுள்ளது. அதில் வருகிற மார்ச் 26 ஆம் தேதி சென்னை நந்தனம் ஓய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடிகர் ரஜினிக்கு பாராட்டு விழா நடத்துவதற்கு திட்டமிட்டிருக்கிறார் சோளிங்கர் ரவி. மேலும் இவ்விழாவில் ரசிகர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க இருப்பதாகவும் , இதற்கான அனுமதியை நடிகர் ரஜினிகாந்திடம் முறையாக பெற்றிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனை தொடர்ந்து இவ்விழாவிற்கு மனிதம் காத்து வாழ்வோம் என்ற தலைப்பையும் வைத்திருக்கின்றனர். இத்தலைப்பினை திரைப்பிரபலங்கள் சிவகார்த்திகேயன், கார்த்திக், ராகவா லாரன்ஸ், அனிருத் , என பலரும் வெளியிட்டிருக்கின்றனர்.