கோலிவுட் வட்டாரத்தில் அனைவருக்கும் பரீட்சையமான இயக்குநர் என்ற பட்டியலில் வெற்றிமாறனுக்கு தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது.
வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் விடுதலை. இத்திரைப்படத்தில் சூரி-க்கு ஜோடியாக நடிகை பவானிஸ்ரீ நடித்திருக்கிறார். மேலும் இதில் நடிகர் விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இத்திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா பிரம்மாண்டமாக இசையமைத்திருக்கிறார்.
அதுமட்டுமல்லாது இத்திரைப்படத்தில் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன் மற்றும் நடிகர் சேத்தன் உள்ளிட்டோரின் கதாபாத்திரங்கள் முக்கியமாக பேசப்பட்டு வருகிறது. இத்திரைப்படம் கடந்த 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பொதுமக்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.
மேலும் இத்திரைப்படத்தின் கதை எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் நாவலை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாக உள்ளது.அதுமட்டுமல்லாது இத்திரைப்படத்திற்கு ஏ தணிக்கை சான்றிதழ் பெற்ற படமாக அறிவிக்கப்பட்டு இருந்தாலும் தற்போது வரை திரையரங்குகளில் கூட்டம் அலைமோதிக்கொண்டு தான் வருகிறது.
இதனைத்தொடர்ந்து விடுதலை திரைப்படத்தை பார்த்த பிரபலங்கள் பலரும் வெற்றிமாறன் மற்றும் சூரியை வெகுவாக பாராட்டி வருகின்றனர், அதுமட்டுமன்றி பொதுமக்களிடையே இத்திரைப்படத்தின் மீதான பார்வை நற்முறையிலே இருந்து வருகிறது, திரைப்படத்தை பார்த்த பெரும்பாலான ரசிகர்களின் கருத்து நடிகர் சூரியை இதுவரையில் நகைச்சுவை நடிகனாக பார்த்துவிட்டு இப்படியொரு நடிப்பில் இவரை திரையில் பார்த்த அனுபவம் மிகவும் சுவாரஸ்யமாக இருந்ததாக சூரியை மக்கள் பாராட்டி வருகின்றனர்.
இதில் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடித்திருந்தாலும் அதீத மக்களின் பார்வை சூரியின் மீதே இருந்து வருவது திரைத்துறையில் அவரை அடுத்தடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்லும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்றே தோன்றுகிறது, மேலும் இத்திரைப்படத்தின் அடுத்தகட்ட வெற்றியாக நடிகர் ரஜினிகாந்த் விடுதலை திரைப்படத்தின் முதற்பாகத்தை பார்த்துவிட்டு வியந்த நிலையில் படக்குழுவினரை சந்தித்து பாராட்டியிருக்கிறார், இதன் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்து வருகிறது.