தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களின் ஒருவரான மணிரத்னம் இயக்கத்தில் வெளியாக இருக்கும் திரைப்படம் பொன்னியின் செல்வன் பாகம் 2.
புகழ்பெற்ற எழுத்தாளர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலைத் தழுவி பொன்னியின் செல்வன் திரைப்படம் உருவாகியுள்ளது. இத்திரைப்படம் ஒட்டுமொத்த தமிழ்சினிமாவின் நீண்ட காலத்து கனவு படமாக இருந்து வந்தது. ஐந்து பாகங்கள் கொண்ட பொன்னியின் செல்வன் புத்தகத்தை தழுவி, இரண்டு பாகங்கள் கொண்ட திரைப்படமாக உருவாக்கியுள்ளார் மணிரத்னம்.
இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் இசையமைத்திருக்கிறார், மேலும் லைகா நிறுவனம் இத்திரைப்படத்தை பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்துள்ளது. இத்திரைப்படத்தின் மீது பொதுமக்களிடையே அதீத எதிர்பார்ப்பு இருந்து வருகிறது, இதனிடையே இத்திரைப்படத்தின் முதல் பாகம் மக்களின் மாபெரும் வரவேற்புக்கு மத்தியில் வெளியாகி வெற்றிநடைப் போட்டது.
பொன்னியின் செல்வன் திரைக்கு வந்த பிறகு மக்கள் பெரும் ஆதரவு கொடுத்து வந்தனர், கிட்டத்தட்ட இப்படத்தின் வசூல் 400 கோடிகளை கடந்தது. மேலும் முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகத்தை 90 நாட்கள் கழித்து வெளியிடுவதாக படக்குழு தெரிவித்திருந்தது. இதனை தொடர்ந்து பொன்னியின் செல்வனின் இரண்டாம் பாகம் அடுத்த மாதம் 29 ஆம் தேதி திரைக்குவரவுள்ளது.
மேலும் இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற இருக்கிறது. இதனிடையே முதல் பாகத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்ட முறையில் நடைபெற்றது, அவ்வப்போது விழாவின் சிறப்பு விருந்தினராக ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் வருகைத்தந்திருந்தனர். அதுமட்டுமல்லாது ரஜினியின் வருகை மக்களிடையே வரவேற்பு பெற்றது.
தற்போது இரண்டாம் பாகத்தின் இசை வெளியீட்டு நடைபெற இருக்கும் நிலையில், ரசிகர்கள் பலரும் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக வரவேண்டும் என ஆர்வத்துடன் இருந்த வந்த நிலையில், படக்குழு இசை வெளியீட்டு விழாவுக்கு நடிகர் கமல்ஹாசன் மற்றும் சிம்பு வருவதாக அறிவித்திருந்த நிலையில் , ரஜினி வருவதைப் பற்றி எவ்வித தகவலையும் தெரிவிக்கவில்லை.
இதனை அறிந்த ரசிகர்கள் பலரும் ரஜினி வராதது ஏன் என்ற கேள்வி மற்றும் குழப்பத்தில் இருந்து வருகின்றனர், இருப்பினும் நடிகர் ரஜினி ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வருவதினால் பொன்னியின் செல்வன் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.