தமிழ்சினிமாவின் முக்கிய முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
திரைத்துறையில் பிரபலமடைந்த நடிகர்களின் புகைப்படங்களை விளம்பரங்கள் போன்றவற்றிற்கு பயன்படுத்துவது வாடிக்கையாக இருந்து வருகிறது. பல்வேறு நிறுவனங்கள் பிரபலங்களின் புகைப்படங்களை பயன்படுத்துவதால் பொதுமக்கள் குழப்பமடைந்து வருவதாக புகார்களும் எழத் தொடங்கின.
இதற்கு முன் பாலிவுட் நடிகர் அமிதாப் பட்சனின் புகைப்படம் அனுமதியின்றி பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல் வெளியானது, இதனிடையே தற்போது தமிழ்சினிமாவின் ஜாம்பவானான நடிகர் ரஜினிகாந்தின் புகைப்படங்களும் அனுமதியின்றி பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதன் அறிவிப்பை நடிகர் ரஜினியின் வழக்கறிஞர் இளம் பாரதி வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, ரஜினிகாந்தின் பெயர்,புகைப்படம், குரலை அனுமதி யாரேனும் பயன்படுத்தினால் அவர்களுக்கு எதிராக குற்றவியல் மற்றும் உரிமையியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்,
மேலும் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தளங்கள் ரஜினிகாதின் பெயர் புகைப்படம் ஆகியவற்றி அனுமதி இல்லாமல் பயன்படுத்தி வருகின்றனர். இது பொதுமக்களிடையே தொடர்ந்து பல குழப்பங்களை ஏற்படுத்தி வருவதால் இது போன்ற ஈடுபாடுகளில் தொடர்ந்து ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.