26.7 C
Tamil Nadu
04 Jun, 2023
CelebritiesCinemaCinema NewsGossipsMovie ReviewMovie TrailerMoviesTelevision

பொன்னியின் செல்வன் மேடையில் மீண்டும் ரஜினி மற்றும் கமல்!..

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக கொண்டு மணிரத்னம் இயக்கத்தில் உருவான திரைப்படம் பொன்னியின் செல்வன்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலர் அக்காலத்திலிருந்து, அதாவது எம்.ஜி.ஆர் முதல் உலக நாயகன் கமல்ஹாசன் வரை பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக்குவதில் மும்முரமாக இருந்து வந்தனர். ஆரம்பகாலக்கட்டத்தில் இக்கதையினை திரைப்படமாக்கும் உரிமையை எம்ஜிஆர் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. சில பல காரணங்கள் காரணமாக எம்ஜிஆரால் இக்கதையை திரைப்படமாக்க முடியவில்லை.

அவரைத் தொடர்ந்து உலக நாயகன் பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக்குவதில் ஆர்வம் கொண்டு வந்தார். இருப்பினும் கமல்ஹாசனாலும் இத்திரைப்படத்தை எடுக்க முடியாத சூழல் உருவானது. இதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவின் கனவு படமான பொன்னியின் செல்வனை இறுதியாக திரைப்படமாக்கியவர் தான் இயக்குநர் மணிரத்னம்.

மணிரத்னம் இயக்கத்தில் பிரபல நட்சத்திரங்களின் நடிப்பில் பிரமாண்ட முறையில் உருவாகிய பொன்னியின் செல்வன் திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. இதில் முதற்பாகத்தை படக்குழு கடந்த ஆண்டு வெளியிட்டது. தமிழர்களின் பாரம்பரிய கதையின் அடிப்படையாக கொண்டு உருவாகிய இத்திரைப்படத்தை காண பொதுமக்கள் இத்திரைப்படத்திற்கு படையெடுத்து சென்றனர். இதனை தொடர்ந்து இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் 90 நாட்களில் வெளியிடப்படும் என படக்குழு தெரிவித்திருந்தது.

அதன்படி அடுத்த மாதம் 28 ஆம் தேதி பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் பொன்னியின் செல்வனின் இரண்டாம் பாகத்தை வெளியிட இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கிடையே பொன்னியின் செல்வனின் முதல் பாகத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் முக்கிய விருந்தினராக ரஜினி மற்றும் கமல் வந்திருந்தனர். பொன்னியின் செல்வனின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி மற்றும் கமல் ஒன்றாக இணைந்திருந்தது ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக அமைந்தது.

இதனை தொடர்ந்து தற்போது பொன்னியின் செல்வனின் இரண்டாம் பாகம் வெளியாக இருக்கும் நிலையில் அதன் இசை வெளியீட்டு விழாவையும் பிரம்மாண்டமாக நடத்த இருக்கிறது படக்குழு, முதல் பாகத்திற்கு ரஜினி மற்றும் கமல் வந்திருந்தது அனைவரிடத்திலும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்திய நிலையில் இரண்டாம் பாகத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கும் ரஜினி, மற்றும் கமல் ஒன்றாக இணைந்து வருவதற்கான பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

See also  ரஜினி படங்களின் ஸ்டன்ட் மாஸ்டர் உயிரிழப்பு - அதிர்ச்சியில் திரையுலகம்

Related posts