தமிழ் சினிமாவில் சமீப நாட்களாக அனைவரின் மனதையும் கவர்ந்த ஓர் நடிகராகவும், இயக்குநராகவும் வலம் வருபவர் தான் பிரதீப் ரங்கநாதன்.
பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் லவ் டுடே. இத்திரைப்படத்தை இவரே இயக்கி இவரே நாயகனாகவும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். இத்திரைப்படத்தில் நாச்சியார் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை இவானா நடித்திருந்தார். இத்திரைப்படம் மக்கள் மத்தியில் அதீத வரவேற்பை பெற்று கிட்டத்தட்ட 100 நாட்களை கடந்து வெற்றிகரமாக திரையில் ஓடியது.
சமீப காலத்தில் நடைபெற்று வரும் காதல் குறித்து படத்தின் கதையம்சம் இருந்ததால் இளைஞர்கள் மத்தியில் இத்திரைப்படத்திற்கு பெரும் வரவேற்பு இருந்தது. இதற்கு முன் நடிகர் ஜெயம் ரவியை வைத்து கோமாளி திரைப்படத்தை இயக்கி இருந்தார். இத்திரைப்படம் சற்று வித்தியாசமான கதையம்சத்தை கொண்டிருந்ததால் இத்திரைப்படமும் 100 நாட்கள் வெற்றியை எட்டித் தந்தது. இவர் அடுத்தடுத்து இயக்கிய இரு திரைப்படங்களும் 100 நாள் வெற்றி கண்டதை அடுத்து இவரின் அடுத்த திரைப்படம் குறித்த அப்டேட்டுக்காக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
லவ்டுடே திரைப்படத்தின் வெற்றிக்கு பின்னதாக பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு பிரதீப் ரங்கநாதனை தேடி வருவதும் குறிப்பிடத்தக்கது. இதனிடையே சற்று மாறுப்பட்ட கதையாக என்ஜினியரிங் மாணவர்கள் குறித்து திரைப்படம் இயக்கப்போவதாக தகவல்கள் வெளியானதை தொடர்ந்து, இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்திலும் பிரதீப் ரங்கநாதன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. இவ்விருபடங்களின் அப்டேட்டை அறிந்த ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்து வரும் நிலையில், தற்போது அடுத்தப்படம் குறித்த தகவலும் வெளியாகியுள்ளது.
அதாவது, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் அஸிடெண்ட் இயக்குநர் மிதுன் இயக்கத்தில் அடுத்த திரைப்படத்தில் நடிக்க இருப்பதாகவும், இதற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இணையத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனைத் தொடர்ந்து ரசிகர்களுக்கு இப்போது இருக்கும் குழப்பம் என்னவென்றால் முதலில் எத்திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கப் போகிறார் என்பது தான். இரண்டு படங்களில் வேறு இயக்குநர்களுடன் கமிட்டாகி இருக்கும் நிலையில் , பிரதீப் ரங்கநாதனும் ஓர் கதை வைத்திருப்பதாகவும் , அதிலும் அவரே நாயகனாக நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கிட்டத்தட்ட ஒரே திரைப்படத்தில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியிரருக்கிறார் பிரதீப், அடுத்தடுத்து பல படங்களின் வாய்ப்பு இவரை தேடி செல்லும் நிலையில், ரசிகர்களும் இவர் நடிப்பில் வெளியாகும் படங்களுக்காக ஆவலுடன் எதிர்பார்த்து காத்து வருகின்றனர், இதில் பிரதீப் ரங்கநாதன் கவனிக்கக் கூடிய ஓர் விஷயம் என்றால் தொடர்ந்து இவர் அளித்த இரு திரைப்படங்களுமே 100 நாள் வெற்றியை கண்டதால் இவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் படங்களின் கதையை சற்று நிதானமாகவே தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டிய சூழ்நிலையும் உருவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.