சமூக வலைத்தளமான ட்விட்டர் பக்கத்தில் சமீப நாட்களாக தமிழ்நாடு என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு காரணமாக அமைவது தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் தமிழ்நாட்டை தமிழ்நாடு என அழைப்பதற்கு பதிலாக தமிழகம் என அழைக்கலாம், அதுதான் சரியான உச்சரிப்பாக இருக்கும் என தெரிவித்திருந்தார்.
ஆளுநரின் கருத்திற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் எழுந்து வருகிறது.மேலும் இதற்கு கண்டனம் தெரிவித்து அரசியல் கட்சித்தலைவர்கள் நாங்கள் தமிழ்நாடு என்று தான் அழைப்போம், ஏனெனில் இது எங்கள் அண்ணா பெற்றுத்தந்த தமிழ்நாடு. இதனை என்றும் கைவிட மாட்டோம் என தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து நெட்டிசன்களும் அரசியல் கட்சிகளுக்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு என்ற ஹேஷ்டேக்கை பதிவிட்டு இந்திய அளவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
இதனிடையே நடிகரும் , அரசியல் கட்சித்தலைவருமான கமல்ஹாசன் தனது சமூக வலைத்தள பக்கமான ட்விட்டரில் தமிழ்நாடு வாழ்க என தமிழ், தெலுங்கு , கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் பதிவிட்டு இருக்கிறார். இது குறித்து அனைத்து மொழிகளிலும் பதிவு செய்திருப்பது தமிழகம் என அழைக்க சொல்பவர்களுக்கு தக்க பதிலடியாக இருக்கும் என பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
பிரேமம் அளவிற்கு எதிர்பார்த்தோமே ஏன்? – அல்போன்ஸுக்கு ட்விட்டரில் கேள்வி எழுப்பும் ரசிகர்கள்..!