தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களில் ஒருவரான நடிகர் கமல்ஹாசன், விக்ரம் திரைப்படத்தின் வெற்றிக்கு பின்னதாக இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் ஹைதராபாத்தில் படப்பிடிப்புகளில் நிகழ்ந்து வந்த நிலையில், இந்தியன் 2 திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்புகள் தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.
மேலும் விக்ரம் திரைப்படத்துக்கு பின்னதாக இவர், இந்தியன் 2 படப்பிடிப்பு , பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது , கட்சி வேலைகள் என மிகவும் பிஸியாக இருந்து வரும் நிலையில் , சமீபத்தில் சென்னையில் அமைந்துள்ள கிறிஸ்தவக் கல்லூரி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அவ்வப்போது கல்லூரி மாணவர்களுடன் உரையாடலில் ஈடுபட்ட போது , முதலில் ஆங்கிலத்தில் நடிகர் கமல் தன் உரையை தொடங்கியுள்ளார். இதனைக் கேட்டு மாணவர்கள் நடிகர் கமல்ஹாசனை தமிழில் பேச சொல்லி தொடர்ந்து கூச்சலிட்டனர். இதனை கேட்டு மாணவர்களுக்கு நன்றி கூறி விட்டு தமிழில் தன் உரையை தொடங்கினார்.
மாணவர்கள் தமிழ், தமிழ் என கூச்சலிட்டதும் நடிகர் கமல் வியந்து போய், மறுமுறை கூறுங்கள் என கேட்டதும் மாணவர்களால் அரங்கமே அதிர்ந்தது. அதனை தொடர்ந்து பேசிய கமல் தனது அனுபவங்களை மாணவர்களோடு பகிர்ந்து கொண்டார். அவ்வப்போது பேசிய அவர் , என் வாழ்வில் அறிவுரை கூற ஆட்கள் இருந்தும் நான் அதை ஒரு பொழுதும் கேட்டதில்லை. வாழ்க்கைல உங்களுக்கு வர்ற எல்லா பால் – லையும் சிக்சர் அடிக்க முடியாது. சரியா கணித்து ஆட வேண்டியது உங்கள் பொறுப்பு.
என் வாழ்க்கையை எனது பெற்றோர்கள் முடிவு செய்யவில்லை, நானும் என் பெற்றோர்களின் வாழ்க்கையை முடிவு செய்யவில்லை, எனது வாழ்வுக்கு அவங்களும் குறுக்கீடாகவும் இல்லை. ஆனால் வாழ்க்கையை சரியான முறையில் தேர்ந்தெடுக்க வேண்டும் அது மிகவும் முக்கியம் என்றார். தற்போது இவ்வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.