அண்ணாத்த திரைப்படத்துக்கு பின்னதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் ஜெயிலர்.
இத்திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் விஜய்யின் பீஸ்ட் திரைப்படத்துக்கு பின் மும்முரமாக இயக்கி வருகிறார். காரணம் பீஸ்ட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பில் இருந்து வந்தது. இத்திரைப்படம் பொதுமக்களிடையே கலவையான விமர்சனங்களையே சந்தித்து வந்தது. இருப்பினும் விஜய் ரசிகர்களின் எதிர்பார்ப்பை போதிய அளவுக்கு இயக்குனர் நெல்சனால் திருப்தி படுத்த முடியவில்லை.
பீஸ்ட் திரைப்படம் நடைமுறையில் இருந்த சமயத்திலேயே நெல்சன் அடுத்ததாக ரஜினியை வைத்து படமெடுக்கப்போவதாக தகவல்கள் வெளியானது. இதனைக் கேட்டு முதலில் ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்து வந்த நிலையில் பீஸ்ட் திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் ரஜினியை வைத்து நெல்சன் இயக்குவதா வேண்டாம் என்று மறுப்பு தெரிவித்து வந்தனர்.
ஆனால் இவையனைத்தையும் தாண்டி நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் நெல்சன் மீது நம்பிக்கை வைத்து கைகொடுத்த திரைப்படம் தான் ஜெயிலர். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் எனில் ஜெயிலர் படத்தை நன்றாக இயக்குவதன் மூலம் தான் நெல்சன் தன்னை ரசிகர்கள் மத்தியில் நிலை நிறுத்திக்கொள்ள முடியும் என்ற முயற்சியில் நெல்சன் துரிதமாக செயல்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.
மேலும் இத்திரைப்படத்தில் பெரிய நட்சத்திர பட்டாளமே விறுவிறுப்பாக நடித்து வருகின்றனர். ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனிடையே படத்தில் பல நட்சத்திரங்கள் நடித்து வரும் நிலையில் , அதில் முக்கிய நடிகர் ஒருவர் இயக்குனர் நெல்சனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.
அதில் நடிகர் ஜாக்கி ஷெராப் ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பில் வைத்து இயக்குனர் நெல்சனுக்கு ஸ்கூட்டர் ஒன்றை பரிசளித்து இருக்கிறார். இப்புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.