விஜய் டிவி மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமானவர் கவின், இவர் நடித்து வெளியாகும் மூன்றாவது திரைப்படம் டாடா.
இதில் கவினுக்கு ஜோடியாக மலையாள நடிகை அபர்ணா தாஸ் நடித்திருந்தார்.ஒலிம்பியா மூவிஸ் தயாரித்திருந்த இத்திரைப்படத்தை அறிமுக இயக்குனர் கணேஷ் கே பாபு எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.மேலும் டாடா திரைப்படத்த்தில் விடிவி கணேஷ் , பாக்யராஜ் என பல முக்கிய நடிகர்கள் நடித்திருந்தனர்.
பிப்ரவரி 10 ஆம் தேதி வெளியான இத்திரைப்படம் மக்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. இத்திரைப்படம் காதல், தந்தையின் பாசம் என மக்களிடம் கவனத்தை பெற்று வருகிறது. டாடா திரைப்படத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பது போன்று நடிகர் கவினுக்கும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.டாடா திரைப்படத்துக்கு பின்னதாக நடிகர் கவின் மேலும் பிரபலமடைந்து வருகிறார்.
திரைப்பிரபலங்களும் டாடா திரைப்படத்தை பார்த்து விட்டு பாராட்டுக்களை சமூக வலைத்தளப்பக்கங்களில் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே நடிகர் தனுஷ் நடிப்பில் வாத்தி திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் தனுஷ் கவின் நடிப்பில் வெளியாகி மக்களின் மனதை கவர்ந்து வரும் டாடா திரைப்படத்தை பார்த்து விட்டு கவின் மற்றும் அபர்ணா தாஸ் இருவரையும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பாராட்டியிருக்கிறார். மேலும் தனுஷ் பாரட்டியது குறித்து கவின் மற்றும் அபர்ணா இருவரும் தங்களது சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டிருப்பது ரசிகர்களிடையே கவனத்தை பெற்று வருகிறது.
previous post