இயக்குநர் எச் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் துணிவு.
இத்திரைப்படம் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படத்துடன் மோதியது. அதாவது ரசிகர்களின் மாபெரும் வரவேற்புக்கு மத்தியில் நீண்ட வருடங்கள் கழித்து அஜித் திரைப்படமும், விஜய் திரைப்படமும் ஒன்றாக வெளியானது ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமைந்தது.
பொங்கலுக்கு வெளியாகி ஒன்றுக்கொன்று மோதிக்கொண்ட வாரிசு மற்றும் துணிவு ஆகிய இரு படங்களும் பொதுமக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும், வசூலில் மட்டும் இரு படங்களும் வாரி குவித்து வருகிறது.
இதனிடையே வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் லியோ திரைப்படத்தில் தனது முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். இந்நிலையில் நடிகர் அஜித் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் அடுத்தப்படத்தில் நடிக்க இருப்பது மட்டுமே உறுதியாகியுள்ளது. இருப்பினும் படம் குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் ஏதும் தற்போது வரை வெளியாகவில்லை.
நடிகர் அஜித் நடிப்பில் தற்போது உருவாக இருக்கும் ஏகே 62 திரைப்படத்தின் இயக்குநராக மகிழ்திருமேனி தேர்வாகியிருக்கும் நிலையில், இயக்குநர் விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டார். இதனை தொடர்ந்து இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க இருக்கிறார். இத்திரைப்படம் குறித்த அறிவிப்புகள் நாளுக்கு நாள் இணையத்தில் கசிந்து வருகிறது.
மேலும் இத்திரைப்படத்தில் அஜித்துக்கு வில்லனாகும் நடிகர்கள் குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது. ஏற்கனவே நடிகர் அருண்விஜய் அஜித்துக்கு வில்லனாக நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் ஏதும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாக உள்ளது.
இதனை தொடர்ந்து தற்போது ஏகே 62 திரைப்படத்தில் நடிகர் அஜித்துடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு நடிகர் ஆர்யாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வைரலாகி வருகிறது. மேலும் ஆர்யா வில்லனாக நடிக்க வாய்ப்பிருப்பதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது, இருப்பினும் ஆர்யா அஜித் என இருவரும் ஒன்றாக இணைந்து ஏற்கனவே ஆரம்பம் திரைப்படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து இவர்கள் இருவரின் காம்போவுக்கும் மக்கள் வரவேற்பு கொடுத்து வந்த நிலையில் ஆரம்பம் திரைப்படம் ஒரு வெற்றிப்படமாகவும அமைந்தது.