27.7 C
Tamil Nadu
28 May, 2023
CelebritiesCinemaCinema NewsGossipsMovie ReviewMovie TrailerMoviesTelevision

இணையத்தை அதிர வைத்த சார்பட்ட 2 திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் பட்டியலில் திகழும் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் சார்பட்டா பரம்பரை.

இத்திரைப்படம் நேரடியாக ஒடிடி தளத்தில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதில் நடிகர் ஆர்யாவுக்கு ஜோடியாக நடிகை துஷாரா விஜயன் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இத்திரைபபடம் முழுக்க முழுக்க குத்துச்சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இத்திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டாலும் திரையில் வெளியானது போலவே மக்கள் வரவேற்பு கொடுத்தனர்.

இத்திரைப்படம் ஆர்யாவின் கெரியரில் மிகவும் முக்கியமானப் படமாக அமைந்தது என்று சொன்னால் மிகையாகது. மேலும் இதனை பார்த்துவிட்ட பல நடிகர்கள் தங்களது வாழ்த்துக்களையும் ஆதரவுகளையும் தெரிவித்து வந்த நிலையில், உலக நாயகன் கமல்ஹாசன் படக்குழுவினரை நேரில் அழைத்து பாரட்டுகளை தெரிவித்தார்.

இத்திரைப்படம் குறித்த விமர்சனங்கள் நாளுக்கு நாள் அதிகரிக்க பொதுமக்களுக்கு இத்திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து. பல உண்மைக் கதைகளையும், சமூகம் சார்ந்த கதைகளையும் இயக்கும் இயக்குநர்களில் குறிப்பிடத்தக்கவர் பா.ரஞ்சித், இவருக்கென தனி ரசிகர் பட்டாளமும் உண்டு. இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்த நிலையில், இப்படத்தின் டெம்பிளேட்டுகள் அனைத்தும் மீம் ஆக சமூக வலைத்தளங்களில் வைரலாக்கப்பட்டு வந்தது.

See also  விஜய்யின் லியோ திரைப்படத்தில் இணைந்த பிரபல நடிகை!

இதனிடையே சார்பட்டா திரைப்படத்தை பார்த்துவிட்டு இப்படத்தின் இரண்டாம் பாகம் எப்பொழுது வரும் என ரசிகர்கள் பலரும் அவ்வப்போதே கேள்வி எழுப்பி வந்தனர். அதனை தொடர்ந்து இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த தகவல்கள் ஏதும் வெளிவராமல் இருந்து வந்த நிலையில் தற்போது இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளிவந்துள்ளது.

நடிகர் ஆர்யா முத்தையா இயக்கத்தில் தற்போது காதர் பாட்சா திரைப்படத்திலும், இயக்குநர் ரஞ்சித் விக்ரமி தங்கலான் திரைப்படத்தை இயக்குவதில் மும்முரமாக இருந்து வரும் நிலையில் சற்றும் எதிர்பாராமல் சார்பட்டா திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது ரசிகர்களை மிகவும் உற்சாகப்படுத்தி வருகிறது. இதில் நடிகர் ஆர்யா தனது சமூக வலைத்தளமான ட்விட்டர் பக்கத்தில் , மேட்ச் பாக்க ரெடியா… ரோஷமான ஆங்கில குத்துச்சண்டை சுற்று 2 எனக் குறிப்பிட்டு சார்பட்டா 2 விரைவில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக குறிப்பிட்டு இருக்கிறார். தற்போது ஆர்யா பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவு இணையத்தை அதிர வைத்து வருகிறது.

See also  விசில் போட ரெடியா… தோனி தயாரிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட்லுக்!..

Related posts