பாலிவுட் திரையுலகின் முக்கிய நடிகர்களில் ஒருவரான நடிகர் அக்ஷய் குமார்,தமிழில் நடிகர் ரஜினி நடிப்பில் வெளியான 2.0 திரைப்படத்தில்,வில்லனாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர்.
இவருக்கு ஹிந்தி தமிழ் மட்டுமல்லாது பல நாடுகளிலும் ரசிகர்கள் ஏராளமாக இருந்து வருகின்றனர். இதனிடையே தற்போது இவரது நடிப்பில் வெளிவர இருக்கும் திரைப்படம் செல்ஃபி. இத்திரைப்படம் மலையாளத்தில் நடிகர் பிருத்திவிராஸ் நடித்திருந்த டிரைவிங் லைசென்ஸ் திரைப்படத்தின் ரிமேக் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து, தற்போது வெளியாகும் நிலையில் இருப்பதால் படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் படக்குழு மும்முரமாக ஈடுபட்டு வருகிறது, அதற்காக சமீபத்தில் நடிகர் அக்ஷய் குமாரும் ப்ரோமோஷனை வித்தியாசமான முறைகளில் கையாண்டு வருகிறார்.
அதன் அடிப்படையில் மும்பையில் செல்ஃபி திரைப்படத்தின் ப்ரோமோஷன் நடைபெற்ற நிலையில் நடிகர் அக்ஷய்குமார் வித்தியாசமான உடையணிந்து ரசிகர்களோடு மூன்று நிமிடங்களில் செல்போனை வைத்துக்கொண்டு 184 செல்ஃபி-க்களை எடுத்துள்ளார். தற்போது இவை கின்னஸ் சாதனையும் படைத்திருக்கிறது. அதில் இதற்கு முன்னதாக ஹாலிவுட் நடிகர் ராக் என்பவர் 3 நிமிடங்களில் 105 செல்ஃபி எடுத்ததே கின்னஸ் ரெக்கார்டாக இருந்து வந்தது. தற்போது இதனை முறியடித்து இருக்கிறார் நடிகர் அக்ஷய் குமார். இதற்கான கின்னஸ் சாதனை சான்றிதழையும் , இவர் ரசிகர்களோடு செல்ஃபி எடுத்துக்கொண்ட இடத்திலேயே வழங்கியுள்ளனர். மேலும் இவர் கின்னஸ் சாதனை படைத்த சான்றிதழுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் கடும் வைரலாகி வருகிறது. இதையடுத்து இச்சாதனையை தனது ரசிகர்களுக்கு அர்பணிப்பதாகவும் தெரிவித்தார் அக்ஷய்குமார்.