நடிகர் அஜித் , வினோத் இயக்கத்தில் வெளியான துணிவு திரைப்படத்திற்கு பிறகு தற்போது லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் அடுத்த திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.
இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான திரைப்படம் துணிவு. இத்திரைப்படம் நடிகர் விஜய் நடிப்பில் உருவான வாரிசு திரைப்படத்துடன் போட்டியாக வெளியானது. ரசிகர்களின் மாபெரும் எதிர்பார்ப்புக்கு மாபெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இவ்விருப்படங்களும் மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது குறிப்பிடத்தக்கது.
துணிவு திரைப்படத்துக்கு பின் தற்போது லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இதற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க இருக்கிறார். இத்திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திரைப்பட நடிகர்களில் மிகவும் வித்தியாசமானவர் நடிகர் அஜித். மேலும் நடிகராக இருந்தாலும் எவ்வித சமூக வலைத்தளங்களிலும் இல்லாத ஒரு நாயகனாகவே இருந்து வருகிறார். இருப்பினும் சமூக வலைத்தளங்களில் அஜித் இல்லையென்றாலும் அவர் தனது மேனேஜர் மூலம் தனது ரசிகர்களுக்கு தன்னைப்பற்றிய பல தகவல்களை தெரிவித்து வருகிறார். அதன்படி அவரது மேனேஜர் தனது ட்விட்டர் பக்கத்தில் அஜித்தின் பைக் பயணம் குறித்த தகவல் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில் லைகா நிறுவனத்தோடு அடுத்தப்பட திரைப்பட படப்பிற்கு பின்னதாக நடிகர் அஜித் துவங்க இருக்கும் 2 வது சுற்று உலக மோட்டார் சைக்கிள் சுற்று பயணத்திற்கு பரஸ்பர மரியாதை பயணம் என பெயரிட்டுள்ளதாக குறிப்பிட்டு இருக்கிறார்.மேலும் கடந்த டிசம்பர் மாதம் துணிவு படத்தின் படப்பிடிப்புக்கு பின் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பயணம் செய்து முடித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது முடிவு செய்திருக்கும் பரஸ்பர மரியாதை பயணம் 7 கண்டங்கள் , 60 நாடுகள் என மொத்தம் 18 மாதங்கள் ஆகும் எனவும், இவை நீண்ட நாள் அஜித்தின் கனவாக இருந்து வருவது என்பதும் குறிப்பிடத்தக்கது.