இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் துணிவு. ரசிகர்களின் மாபெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது.
இதனை தொடர்ந்து , தற்போது லைகா புரோடக்ஷன் தயாரிப்பில் அடுத்த திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். ஆரம்ப கட்டத்தில் இத்திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனை அறிந்த ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்பில் இருந்து வரும் சமயத்தில் படக்குழு திடீரென அறிவித்த ஓர் அறிவிப்பால் ரசிகர்கள் குளம்பி வருகின்றனர்.
விக்னேஷ் அஜித்தை வைத்து இயக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்த அதே நேரத்தில் , லைகா புரொடக்ஷன்ஸ் விக்னேஷ் சிவனின் திரைக்கதை அஜித்துக்கு போதுமானதாக இல்லையென அவரை நீக்கி விட்டதாக அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியானது. இதையடுத்து விக்னேஷ் சிவனும் வாய்ப்பு , இயக்குனர் மகிழ்திருமேனி சென்றதாகவும், இதன் அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே நடிகர் அஜித் துணிவு திரைப்படத்துக்கு பின்னதாக தனது குடும்பத்தோடு சுற்றுலா சென்றுள்ளார், அவ்வப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் கடுமையாக வைரலானது. இந்நிலையில் நடிகர் அஜித் சென்னை விமான நிலையத்தில் ரசிகர்களோடு எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதன் மூலம் நடிகர் அஜித் சென்னை வந்தது உறுதியாகிறது. மேலும் லைகா புரோடக்ஷனின் தயாரிப்பில் வெளிவரும் ஏகே 62 திரைப்படத்தின் படப்பிடிப்புகளுக்காக வந்திருக்க கூடும் என சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
previous post