வாரிசு திரைப்படத்துக்கு பின்னதாக விஜய் மும்முரமாக நடித்து வரும் திரைப்படம் லியோ. இதனை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.
ஏற்கனவே விஜய் மற்றும் லோகேஷ் கூட்டணியில் வெளியான மாஸ்டர் திரைப்படம் மக்களிடையே அதிகப்படியான வரவேற்பு பெற்றது. ரசிகர்கள் லியோ திரைப்படத்தின் மீது மிகவும் ஆர்வத்தோடு இருப்பதற்கு இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதும் ஒரு காரணமாக இருந்து வருகிறது. சொல்லப்போனால் மாஸ்டர் திரைப்படத்திற்கும் இசையை அனிருத் தான் இயக்கி இருந்தார், தற்போது லியோ திரைப்படத்திற்கும் இவரே இசையமைப்பதால் ரசிகர்கள் சற்று அதீத எதிர்பார்ப்பிலே இருந்து வருகின்றனர்.
இத்திரைப்படத்தில் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. இதில் திரிஷா, கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின் , அர்ஜூன் உள்ளிட்ட பலரும் நடிக்க இருக்கின்றனர். இதில் தற்போது படப்பிடிப்பிற்காக காஷ்மீர் சென்றிருக்கும் படக்குழு, லியோ திரைப்பட படப்பிடிப்பில் தங்களது கவனத்தை முழுவதுமாக செலுத்தி வருகின்றனர். இதனிடையே நடிகர் விஜய் மற்றும் திரிஷா இருவருக்கும் ஓர் சிறிய இடைவெளி விடப்பட்டுள்ளதால் இருவரும் சென்னை திரும்பி இருக்கின்றனர்.
இதனை தொடர்ந்து மிஷ்கின் வரும் காட்சிகளுக்கான படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் அவரும் சென்னை திரும்பினார். இந்நிலையில் சென்னை திரும்பிய கையுடன் மிஷ்கின் லோகேஷ் கனகராஜ் குறித்து ஓர் பதிவை வெளியிட்டார். அதில் போர் வீரனை போல லியோ படப்பிடிப்பு தளத்தில் லோகேஷ் செயல்பட்டு வருவதாக குறிப்பிட்டார், அவர் கூறியது போலவே லியோ திரைப்படத்தின் பட்பிடிப்புகளும் மின்னல் வேகத்தில் உருவாகி வருகிறது போல..
படத்தை திட்டமிட்ட தேதிக்குள் நிச்சயம் வெளியிட வேண்டும் என்ற பிடிவாதம் தற்போதே லோகேஷிடம் தென்பட்டு வருகிறது. மிஷ்கின் காட்சிகள் நிறைவடைந்த நிலையில் தற்போது மீண்டும் விஜய் படப்பிடிப்பிற்கு திரும்ப இருப்பதாகவும் , மேலும் அனைவரின் எதிர்பார்ப்புகளில் உயர்ந்து இருக்கும் ஆக்ஷன் கிங் அர்ஜூன் லியோ படப்பிடிப்பு தளத்திற்கு செல்ல இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே கௌதம் வாசுதேவ் மேனன் காட்சிகளும் நிறைவடையும் நிலையில் இருப்பதால் அடுத்து மலையாள நடிகர் மேத்திவ் தாமஸ் மற்றும் அர்ஜூன் இருவருடனான விஜய்யின் காட்சிகள் படமாக்க போவதாக தகவல் வெளியாகி ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி வருகிறது.
பிரேமம் அளவிற்கு எதிர்பார்த்தோமே ஏன்? – அல்போன்ஸுக்கு ட்விட்டரில் கேள்வி எழுப்பும் ரசிகர்கள்..!