இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் வெளியான திரைப்படம் பதான்.
ஷாருக்கானின் பதான் திரைப்படம் பல்வேறு சர்ச்சைகளுக்கு பிறகு திரையில் வெளியானது, இத்திரைப்படத்தில் நடிகர் ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடித்திருக்கிறார். இதில் அவர் அணிந்து வரும் காவி நிற உடை சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஷாருக்கான், தீபிகாவை தொடர்ந்து பதான் திரைப்படத்தின் பாலிவுட் பிரபலம் ஜான் ஆபிரகாம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.இத்திரைப்படம் கடந்த மாதம் 25 ஆம் தேதி ரசிகர்களின் மாபெரும் வரவேற்புக்கு மத்தியில் வெளியானது, அதுமட்டுமல்லாது இந்தியாவில் மொத்தம் 8000 திரையரங்குகளில் இத்திரைப்படம் திரையிடப்பட்டது.
பல சர்ச்சைகளுக்கு மத்தியில் இத்திரைப்படம் வெளியானலும் ரசிகர்களிடையே இத்திரைப்படத்துக்கு தனி வரவேற்பு இருந்தது.இதனிடையே இத்திரைப்படத்தின் வசூல் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டு இருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் வைத்து வருகிறது. அதாவது இத்திரைப்படம் இந்தியில் மட்டும் இதுவரை 1000 கோடி ரூபாய் வசூலித்து இருப்பதாக தகவலை வெளியிட்டுள்ளது.இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. மேலும் பதான் திரைப்படமே இந்தி திரையுலகில் ரூ.1000 கோடி வசூலித்த முதல் படம் என்ற பெருமையை பெற்றிருப்பதும் தற்போது குறிப்பிடத்தக்கதாக உள்ளது. பதானின் வெற்றியை இந்தி திரையுலகில் பிரம்மாண்டமாக கொண்டாடி வருகின்றனர்.