27.7 C
Tamil Nadu
28 May, 2023
Auto News

ரயில்வே தண்டவாளத்திற்கு அருகே பீரோ மாதிரி ஒரு பெட்டி ஏன் வைக்கப்படுகிறது தெரியுமா?

ரயில் பயணத்தின் போது அடிக்கடி கண்ணால் பார்த்தும் பலவற்றை பற்றி அறியாமல் இருப்போம். அது தெரியவந்தால் இப்படியெல்லாம் கூட கருவிகள் இருக்கிறதா என்று தோன்றும். அப்படி ஒரு விஷயத்தை தற்போது பார்ப்போம்.

ரயிலில் பயணிக்கும் போது ஆங்காங்கே ரயில்வே பாதைக்கு அருகே குட்டி பீரோ மாதிரியாக அலுமினிய நிறத்தில் ஒரு பெட்டி ஒன்று இருப்பதை பார்த்திருப்பீர்கள். பலர் இது ஏதோ ரயில்வே தண்டவாள சாதனங்களை வைக்கும் பெட்டி என நினைத்து கொண்டிருப்பார்கள். பலர் இதை யோசித்துக் கூட பார்த்திருக்க மாட்டார்கள்.

ஆனால் இந்த பெட்டிதான் பயணிகளின் உயிரைக் காப்பாற்றுகிறது என்று சொன்னால் நம்புவீர்களா? நீங்கள் நம்பவில்லை என்றாலும் அது தான் நிஜம். இந்த பெட்டிக்கு ஆக்ஸில் பாக்ஸ் கவுண்டர் என்று பெயர். இந்த ஆக்ஸில் பாக்ஸ்கள் ரயில் பாதையில் ஒவ்வொரு 3 அல்லது 5 கி.மீக்கு ஒன்று பொருத்தப்பட்டிருக்கும்.

See also  பதவியேற்ற நாளில் 3 கோப்புகளில் கையொப்பமிட்ட உதயநிதி !

இந்த ஆக்ஸில் பாக்ஸின் வேலை ரயில் பெட்டிகளை எண்ணுவது தான். அதாவது ரயில் நிலையத்திலிருந்த கிளம்பும் போது ஒரு ரயில் 10 பெட்டியுடன் கிளம்புகிறது என வைத்துக்கொள்வோம். இது தொடர்ந்து 10 பெட்டிகளுடன் செல்கிறதா? இடையில் ஏதாவது பெட்டி கழன்று விடுகிறதா என்பதைக் கண்காணிக்கும் கருவிதான் இது.

இது எப்படின்னே சைட்ல இருந்துட்டு ரயில் பெட்டிகளை எண்ணும்னு சந்தேகம் உங்களுக்கு வருவது இயல்பு தான். இந்த பெட்டி எண்ணுவதில்லை நன்றாகக் கவனித்தீர்கள் என்றால் இந்த பெட்டிலிருந்து ஒரு வயர் ரயில்வே தண்டவாளத்தை நோக்கி வரும். இதற்கென ரயில் தண்டவாளத்தில் ஒரு கருவி பொருத்தப்பட்டிருக்கும்.

News Courtesy : https://twitter.com/Unmai_Kasakkum

Related posts